Susiyam – சுசியம்Published: 2020-09-25Prep time: 30 mins Cook time: 30 mins Total time: 60 minsSummarySusiyam – Healthy Evening Snacks – சுவையான சுசியம்
- Ingredients
- தோசை மாவு – 1 கப்
- பாசி பருப்பு – 200 கிராம்
- வெல்லம் – 300 கிராம்
- ஏலக்காய் – 3 எண்ணம்
- நெய் – 3 டீஸ்பூன்
- தேங்காய் துருவல் – 1 கப்
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- சோடா உப்பு – 1/2 டீஸ்பூன்
- Directions
- Susiyam – Healthy Evening Snacks – சுவையான சுசியம் செய்வது எப்படி
- புளிக்க வைக்காத இட்லி மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
- பாசிப்பயிறு, தட்டாம் பயிறு மற்றும் கடலைப் பருப்பு மூன்றில் எது வேணாலும் பயன்படுத்தலாம்.
- பாசிப்பயறை 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி 4 அல்லது 5 விசில் வைத்து வேகவிடவும்.
- பாசிப்பயறை ஊற வைக்க வில்லை என்றால் கூடுதலாக 2 விசில் வைத்து இறக்கவும்.
- வேக வைத்த பாசிப்பருப்பை மிக்ஸியில் போட்டு அரை பாதியாக அரைத்துக் கொள்ளவும்.
- சிறிதளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் பாகு காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- கடாயில் நெய்யை ஊற்றி தேங்காய் துருவலைப் போட்டு லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
- கடாயில் வெல்லப்பாகை ஊற்றி அத்துடன் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பையும் சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாமல் கலக்கிக் கொள்ளவும்.
- அத்துடன் தேங்காய் துருவலையும், மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டியாக வரும் வரை வதக்கவும். பூரணம் ரெடி ஆயிடுச்சு.
- பூரணம் சூடு ஆறியபிறகு சின்ன சின்ன உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- இட்லி மாவை எடுத்துக் கொள்ளும் அதனுடன் 2 டீஸ்பூன் பச்சரிசி மாவு, மற்றும் சிறிதளவு சோடா உப்பு சேர்த்து நன்றாக கொட்டியான பாதத்தில் கலந்து வைத்துக் கொள்ளவும்.
- பச்சரிசி மாவு மொறுமொறுப்பான இருக்கும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூரணத்தை எடுத்து மாவில் முக்கி அதை எடுத்து எண்ணெயில் போட்டு மிதமான சுட்டில் வைத்து பெறித்து எடுத்தால் சுசியம் ரெடி.
- பந்து போல அருமையான சுசியம் சுட சுட ரெடியாகி விடும்.
Yield10
Serving size: 2
Calories per serving: 250
Fat per serving: 18g