மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மார்கழி உற்சவம் – Madurai Temples Function
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தெப்பத்திருவிழா உற்சவ நிகழ்ச்சி நிரல்
ஆங்கில ஆண்டு 2024
ஜனவரி 13, தெப்ப உற்சவ வாஸ்து சாந்தி
ஜனவரி 14, கொடியேற்றம்
ஜனவரி 19, சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை
ஜனவரி 21, வலை வீசி திருவிளையாடல்
ஜனவரி 22, எடுப்பு தேர் (சட்டத்தேர்) {சித்திரை வீதிகள்}
ஜனவரி 23, தீர்த்தம், தெப்பம் முட்டுத்தள்ளுதல் {தெப்பக்குளம், அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்}
ஜனவரி 24, கதிர் அறுப்புத் திருவிழா
ஜனவரி 25, தெப்பத்திருவிழா {மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்}
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மார்கழி உற்சவ நிகழ்ச்சி நிரல்
மார்கழி (தனுார்) மாத பிறப்பு, ஆங்கில ஆண்டு 2024, டிசம்பர் 17ம் தேதி.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மார்கழி மாதம் (டிசம்பர், 17 முதல் 2024 ஜனவரி, 14 வரை) நடைதிறப்பில் மாற்றம் செய்யப்படுகிறது.
வெளிக்கோபுர கதவுகள் அதிகாலை 3:30 மணிக்கு திறக்கப்பட்டு, உச்சிக்கால பூஜை முடிந்து மதியம் 12:00 மணிக்கு நடைசாத்தப்படும்.
தினமும் அதிகாலை திருஞானசம்பந்தர் சன்னதி முன்பு திருஞான பால் வழங்கப்படும்.
மீண்டும் மாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9:30 மணிக்குள் நடைசாத்தப்படும்.
டிசம்பர், 18 முதல் 26 வரை எண்ணெய் காப்பு உற்ஸவம் , மாலை 6:00 மணிக்கு சித்திரை வீதிகளில் வலம்.
டிசம்பர், 25 கோரதத்தில் எழுந்தருளும் அம்மன் சித்திரை வீதியில் எழுந்தருளுவார்.
டிசம்பர்,26 கனகதண்டியல் அலங்காரத்திலருளும் அம்மன் சித்திரை வீதியில் எழுந்தருளுவார்.
டிசம்பர்,27 திருவாதிரையன்று பொன்னுாஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதியில் வலம் வருவர்.
ஆருத்ரா தரிசனம்
டிசம்பர், 26 இரவு முதல் மறுநாள் அதிகாலை வரை இத்திருக்கோயிலில் உள்ள பஞ்சலோக பஞ்ச சபை நடராஜரின் உற்ஸவ திருமேனிகளுக்கு அபிஷேகம் நடக்கும்.
டிசம்பர், 27 காலை 7:00 மணிக்கு பஞ்ச சபை ஐந்து உற்ஸவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் மாசி வீதிகளில் வலம் வருவர்.
2024 ஜனவரி, 4 – அஷ்டமி சப்பரம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழாக்கள்
டிசம்பர், 17 தீர்த்த உற்ஸவம்
டிசம்பர், 18 மாணிக்கவாசகர் காப்பு கட்டுதல்
டிசம்பர், 23 வைகுண்ட ஏகாதசி
டிசம்பர், 24 மாத கார்த்திகை
டிசம்பர், 26 மாணிக்கவாசகர் தேர், ராட்டினம்.
டிசம்பர், 27 ஆருத்ரா தரிசனம், பவுர்ணமி.
டிசம்பர், 28 எண்ணெய் காப்பு திருவிழா ஆரம்பம்
ஜனவரி, 1 எண்ணெய் காப்பு திருவிழா நிறைவு.
Madurai Temples Function updates